செய்தி புதுப்பிப்பு: 02.03.2025
தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களாக சுவிஸ் நாட்டை ஊடறுத்துப் பயணித்து ஈருருளிப்பயணமானது நேற்றையதினம் வோ மாநிலத்தில் ஆரம்பித்து ஜெனிவா ஐ.நா சபை முன்றலில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை சென்றடைந்தது.
இதன் தொடர்ச்சியாக வருகின்ற திங்கள் ஐ.நா சபை முன்றலில் கவனியீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது
————————————————————————————————————————————————
செய்தி புதுப்பிப்பு: 01.03.2025
இன்றையதினம் (28.02.2025) ஈருருளிப்பயணமானது வோ மாநிலத்தின் லவுசான் நகரசபையை சென்றடைந்து அதன் தொடர்ச்சியாக Preverenges எனும் இடத்தில் நிறைவுற்றது.
ஈருருளிப்பயணமானது ஜெனிவா ஐ.நா சபை முன்றலில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை சென்றடைய உள்ளது.
————————————————————————————————————————————————
செய்தி புதுப்பிப்பு: 28.02.2025
தொடர்ச்சியாக கடந்த 4 நாட்களாக சுவிஸ் நாட்டை ஊடறுத்துப் பயணித்து 27.02.2025 சுவிஸ் நாட்டின் பிறைவூர்க் மாநில எல்லையில் நிறைவடைந்தது.
அறவழிப்போராட்டத்தின் 16 ஆம் நாளாகி (28.02.2025) இன்று அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,வோ மாநிலத்திற்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது.தற்போது நிலவும் கடும் மழை, குளிரையும் பொருட்படுத்தாது மலை வழிப்பாதைகளினூடாக கடினமான பயணத்தை அர்ப்பணிப்போடு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி புதுப்பிப்பு: 27.02.2025
இன்றையதினம் (27.02.2025) கடும் பனிப்பொழிவின் மத்தியில் பேர்ண் மாநிலத்தில் இருந்து பிறிபேர்க் மாநிலத்தின் ஊடாக பயணித்த ஈருருளிப்பயணம் வோ மாநிலத்தின் எல்லையில் நிறைவுற்றது.
நாளைய தினம் ஈருருளிப்பயணமானது வோ மாநிலத்தை நோக்கி பயணிக்க உள்ளது.
————————————————————————————————————————————————
செய்தி புதுப்பிப்பு: 26.02.2025
இன்றையதினம் (26.02.2025) சொலத்தூண் மாநிலத்தில் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டின் தலைநகராகிய பேர்ண் மாநிலத்தினை நோக்கி பயணித்து சுவிஸ் நாட்டின் பாராளுமன்றத்திற்கு முன்னர் நிறைவடைந்தது.
நாளையதினம் பேர்ண் மாநிலத்தில் இருந்து பிறிபேர்க் மாநிலத்தை நோக்கி பயணிக்க உள்ளது.
————————————————————————————————————————————————
செய்தி புதுப்பிப்பு: 25.02.2025
தொடர்ச்சியாக இன்றைய தினம் (25.02.2025) சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது, மலை வழிப் பாதையின் ஊடாக பயணித்து சொலத்தூண் மாநிலத்தில் நிறைவுற்றது.
நாளையதினம் பேர்ண் மாநிலத்தினை நோக்கி பயணித்து நிறைவடைய உள்ளது.
————————————————————————————————————————————————
செய்தி புதுப்பிப்பு: 24.02.2025
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 13.02.2025 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இன்று (24.02.2025) சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது.
அதன் தொடர்ச்சியாக நாளைய தினம் சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி ஈருருளிப்பயணம் முறையே பாசல்லாண்ட் ( Basel-Landschaft), சொலத்தூண் ( Solothurn ) பேர்ண் (Bern) பிறிபேர்க் (Frieburg) வோ (Vaud) மாநிலங்கள் ஊடாக பயணித்து நீதி கோரிய பயணம் எதிர்வரும் (03.03.2025) ஜெனிவா மாநிலத்தின் அமைந்துள்ள ஐ.நா முன்றலை சென்றடைய உள்ளது. அனைவரும் ஈருருளி பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்







