Advertisement

இவர்டோன் நகரில் நடுகல் வழிபாடு 2025

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து, மாவீரர் வாரத்தின் தொடக்க நாளன்று சுவிஸ் நாட்டில் மாவீரர் நினைவுக்கல் அமைந்துள்ள வோ மாநிலத்தின் இவர்டோன் நகரில் நடுகல் வழிபாடு

சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நடுகல் வழிபாடு தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் வகையில் 21.11.2025 வெள்ளி மாலை 17:30 மணியளவில் சுவிஸ் நாட்டின் வோ மாநிலத்தின் இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள மாவீரர் நினைவுக்கல்லுக்கான நடுகல் வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவுகளும் உணர்வாளர்களும் மாவீரர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மாவீரர் வார ஆரம்பநாள் ஆன நவம்பர் 21 அன்று, அதே நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழத் தேசியக்கொடியாக பிரகடனம் செய்து அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், தமிழீழத் தேசியக்கொடிகளுடன் மாவீரர்களை நெஞ்சிலிருத்தி நடுகல் வழிபாடு செய்யப்பட்டது.

இவ்வாண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாளானது எதிர்வரும் நவம்பர் 27 அன்று 12.30 மணிக்கு பாசல் மாநிலத்தின் மிகப்பிரமாண்ட அரங்காகிய Messe Nordல் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. மானமாவீரருக்கு வணக்கம் செலுத்தி, உறுதி எடுக்க தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் அணிதிரண்டு வருகை தருமாறு உரிமையோடு அழைக்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழத் தேசிய மாவீரர் பணிமனை சுவிஸ் கிளை