Advertisement

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் -சுவிஸ்

04.12.2025

தமிழ்க் கல்விச்சேவை / TESS Care

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்படைந்த 50 சிறப்புத் தேவையுடையவர்களுக்கு கருத்தாஸ் – எகெட் அமைப்பின் உதவியுடன் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பெற்றன.

வழங்கப்பெற்ற இடங்கள்:
மட்டக்களப்பு மாவட்டம் : வந்தாறுமூலை மற்றும் மாவடிவேம்பு கிராமங்கள்

04.12.2025

தமிழ்க் கல்விச்சேவை / TESS Care

இன்று (04.12.2025) மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் மற்றும் வீடுதிரும்பத் தயாராகும் அளவாகை, ராசூல் புதுவெளி, பொன்தீவுக் கண்டல் ஆகிய இடங்களிலுள்ள 244 குடும்பங்களுக்கு மன்னார் கரித்தாஸ் – வாழ்வோதயம் அமைப்பின் உதவியுடன் உலர் உணவு வழங்கப்பெற்றது.

04.12.2025

தமிழ்க் கல்விச்சேவை / TESS Care

இன்று (04.12.2025) மட்டக்களப்பு கரித்தாஸ் – எகெட் அமைப்பின் உதவியுடன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 145 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கப்பெற்றது.
வழங்கப்பெற்ற இடங்கள்:
அம்பாறை மாவட்டம் – துரைவந்திமேடு கிராமம்
மட்டக்களப்பு மாவட்டம் – இழுக்குப்பொத்தானை, முந்தன் குமாரவில் கிராமங்கள்

04.12.2025

தமிழ்க் கல்விச்சேவை / TESS Care

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 200 உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.

04.12.2025

தமிழ்க் கல்விச்சேவை / TESS Care

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் ஆண்டான்குளம் கிராமத்தில் 105 குடும்பங்களுக்கு தமிழ்க் கல்விச்சேவை / TESS Care இனால் உலர் உணவு வழங்கப்பட்டது.

03.12.2025

மார்த்தினி ஞானலிங்கேசுவரர் சைவநெறிக்கூடம்.

தாயகத்தில் ஏற்பட்ட பேரிடரின் போது ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட மன்னார் தேக்கம் கிராமத்தைச் சேர்ந்த 42 ( நாற்பத்து இரண்டு)குடும்பங்களுக்கு இன்று (03.12.2025) அவசரகால உதவியாக சுவிஸில் உள்ள வலே மானில சைவ நெறிக்கூட ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பில் அரிசி, மா,பருப்பு,சோயா, சீனி,தேயிலை, பிஸ்கற், பனடோல் ஆகியவை அடங்கிய உணவுப் பொதியுடன் சிறுவர்களுக்கான பால்மா, பெட்சீற், நுளம்புவலை என்பனவும் வழங்கப்பட்டது. தாயகம் நோக்கிய புலம்பெயர் மக்களின் உதவிகரம் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதாக அமைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

02.12.2025

உறவுக்குக் கைகொடுப்போம் அமைப்பு

தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த 22 குடும்பங்களிற்கும் சிறாட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த 66 குடும்பங்களுக்கும் உலர்உணவுப் பொருட்கள், பால்மா, பிஸ்கட் மற்றும் பாய், போர்வை, குழந்தைகளுக்கான பம்ப்ஸ் என்பன அடங்கிய பொதி இன்று (02.12.2025) வழங்கப்பட்டது.இவ்வுதவியானது உறவுக்குக் கைகொடும்போம் சுவிஸ் அமைப்பின் நிதிப்பங்களிப்போடு இப்பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.