Advertisement

தமிழர் தேசத்தின் கரிநாள்

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு.

சிங்களப் பேரினவாத அரசு தமது எழுபத்திஏழாவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் இச்சூழலில் தாயகத்தில் தமிழர்களின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பினை வெளிப்படுத்தும் விதமாக சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் காத்திரமான கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் சுவிஸ் நாட்டிலும் பேர்ண மாநிலத்தில் 04.02.2025 அன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிராகவும், ஒற்றையாட்சிக்கெதிராகவும், இனவழிப்பிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமது எதிர்ப்புக்களையும் பதாதைகளுாடாக வெளிப்படுத்தி துண்டுப்பிரசுரங்களை வேற்றின மக்களுக்கும் வழங்கி, தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம் என்ற இலட்சிய உறுதியையும் வெளிப்படுத்தினர்.