Advertisement

கேணல் கிட்டு உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025

Youth Kiddu Cup

வங்கக்கடலில் வீரகாவியமாகிய  கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு சுமந்து 28 வது தடவையாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால்  நடாத்தப்பட்டது.

பெரியவர்களுகன்னா உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 04.01.2025 அன்று Langnau நகரிலும் இளையோர் மற்றும் பெண்களுக்கான உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 11.01.2025 அன்று Seon நகரில் சிறப்பாக நடைபெற்றது.

பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றலை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

காலை எட்டு முப்பது  மணிக்கு ஆரம்பமாகிய ஆட்டங்கள்  இரவு 10:30 மணி வரை நடைபெற்று பரிசளிப்புடன் இனிதே நிறைவுபெற்றது.

தமிழீழ விளையாட்டுத்துறை
சுவிஸ் கிளை
11.01.2025