சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29.06.2025 (ஞாயிறு) சப்கவுசன் மாநிலத்தில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகளுடன், தமிழீழ விளையாட்டுத்துறைக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.
தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும், தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், மாவீரர்களின் தியாக நினைவுகள் ஊடாக தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த இவ் விளையாட்டுக்களில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப வணக்க நிகழ்வுகளில் சுவிசின் பல கழகங்களில் இருந்தும் கலந்து கொண்ட இளம் தலைமுறையினர் மிகுந்த பற்றுடனும், ஆர்வத்தோடும் உரிய நேரத்தில் பங்குபற்றி எமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியமையானது அவர்களின் தேசிய உணர்வையும், பற்றையும் வெளிப்படுத்தி நின்றது.
முப்பத்திநான்காவது தடவையாக நடத்தப்பட்ட வளர்ந்தோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுடன் இளையோர் உதைபந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம் என அனைத்து விளையாட்டுக்களிலும் ஆன்கள்,பெண்கள்,சிறுவர்களென அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இம்முறை பெண்கள் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 7அணிகள் பங்கு பற்றியிருந்தது சிறப்பம்சமாகும். இறுதியாக வெற்றி பெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அனைத்துக்கொடிகளும் கையேற்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள் சிறப்பாக நிறைவடைந்தன.
முதற்தடவையாக சப்கவுசன் மாநிலத்தில் இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய சப்கவுசன் மாநில மக்கள், தமிழின உணர்வாளர்கள், கழக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் கழகவீரர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்
நன்றி
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளை
வளந்தோர் பிரிவு
| முதலாம் இடம் | FC City Boys Zurich |
| இரண்டாம் இடம் | SC Young Star Lyss |
| மூன்றாம் இடம் | Young Birds FC Luzern |
| நான்காம் இடம் | SC Blue Star Lausanne |
| சிறந்த பந்துக்காப்பாளர் | சியாம் சிறிக்காந்தன் (FC City Boys) |
| சிறந்த விளையாட்டு வீரர் | நிறோஜ் நடராஜா ( SC Young Star Lyss) |
| அதிகூடிய இலக்குகளை பெற்றவர் | அபிரன் சாம்பசிவம் ( Sc Tamil Blue Birds) |
| இறுதியாட்டத்தின் சிறந்த வீரர் | ஆகாஷ் தங்கராஜா (FC City Boys Zurich) |
பெண்கள் பிரிவு
| முதலாம் இடம் | Ilam Siruththaikal SC Girls |
| இரண்டாம் இடம் | SC Royal Bern |
| மூன்றாம் இடம் | SC Tamil Blue Birds |
| நான்காம் இடம் | FC City Girls |
| சிறந்த பந்துக்காப்பாளர் | இந்துஜா விஜயராஜ் (Ilam Siruththaikal SC Girls) |
| சிறந்த விளையாட்டு வீரர் | வர்ஷா ஐங்கரன் ( SC Royal Bern) |
| அதிகூடிய இலக்குகளை பெற்றவர் | ஆராதனா முருகானந்தன் ( Ilam Siruththaikal SC Girls) |
| இறுதியாட்டத்தின் சிறந்த வீரர் | ஆராதனா முருகானந்தன் ( Ilam Siruththaikal SC Girls) |
U13 பிரிவு
| முதலாம் இடம் | SC Vanavil Luzern |
| இரண்டாம் இடம் | Thaiman SC Zug |
| மூன்றாம் இடம் | SC Young Star Lyss |
| நான்காம் இடம் | FC City Boys Zurich |
| சிறந்த பந்துக்காப்பாளர் | Nils Zurbrügg (SC Vanavil Luzern) |
| சிறந்த விளையாட்டு வீரர் | அபிநாஷ் கமலநாதன் ( Thaiman SC Zug) |
| அதிகூடிய இலக்குகளை பெற்றவர் | அர்ஜுன் நவரட்னராசா ( SC Vanavil Luzern)
விஷ்ணுகாந் ரஜனிகாந்த் (Thaiman SC Zug) |
| இறுதியாட்டத்தின் சிறந்த வீரர் | Nils Zurbrügg (SC Vanavil Luzern) |
U09 பிரிவு
| முதலாம் இடம் | Sc Thaiman Zug |
| இரண்டாம் இடம் | Tamil Youth |
| மூன்றாம் இடம் | SC Young Star Lyss |
| நான்காம் இடம் | |
| சிறந்த பந்துக்காப்பாளர் | ஜஷ்ரிஜா சுசன் கணேசமூர்த்தி (SC Thaiman Zug) |
| சிறந்த விளையாட்டு வீரர் | Jay Kurt Märki (SC Thaiman Zug) |
| அதிகூடிய இலக்குகளை பெற்றவர் | அஜய் கமலநாதன் ( SC Thaiman Zug) |
| இறுதியாட்டத்தின் சிறந்த வீரர் | அஜய் கமலநாதன் ( SC Thaiman Zug) |
7 vs 7 பிரிவு
| முதலாம் இடம் | FC Tamil Sporting Yellow |
| இரண்டாம் இடம் | FC Tamil Sporting SH |
| மூன்றாம் இடம் | Tamil United FC White |
| நான்காம் இடம் | Thaiman SC Zug |
| சிறந்த பந்துக்காப்பாளர் | அபிஷாந் ஜெயராஜ் ( FC Tamil Sporting Yellow) |
| சிறந்த விளையாட்டு வீரர் | நிலக்சன் தேவநாயகம் ( FC Tamil Sporting SH) |
| அதிகூடிய இலக்குகளை பெற்றவர் | டைலன் சுரேந்திரன் (FC Tamil Sporting Yellow) தனுஷன் உதயேந்திரன் (FC Tamil Sporting Yellow) ஆகாஷ் கருணாதரன் ( FC Tamil Sporting SH) |
| இறுதியாட்டத்தின் சிறந்த வீரர் | தனுஷன் உதயேந்தன் ( FC Tamil Sporting Yellow) |
U11 பிரிவு
| முதலாம் இடம் | SC Young Star Lyss |
| இரண்டாம் இடம் | FC City Boys Zurich |
| மூன்றாம் இடம் | SC Vanavil Luzern |
| நான்காம் இடம் | Thaiman SC Zug |
| சிறந்த பந்துக்காப்பாளர் | Neel Richard Pfister ( FC City Boys Zurich) |
| சிறந்த விளையாட்டு வீரர் | சர்வேஸ் தவராஜசிங்கம் ( FC City Boys Zurich) |
| அதிகூடிய இலக்குகளை பெற்றவர் | Lazar Ugrinic ( Thaiman SC Zug) |
| இறுதியாட்டத்தின் சிறந்த வீரர் | Teyshan Thomas (SC Young Star Lyss) |
O50 பிரிவு
| முதலாம் இடம் | SC Blue Star Lausanne |
| இரண்டாம் இடம் | SC Tamil Blue Birds |
| மூன்றாம் இடம் | Swiss Club B |
| நான்காம் இடம் | Swiss Club |
| சிறந்த பந்துக்காப்பாளர் | குகதாசன் தவதுரை (SC Blue Star Lausanne) |
| சிறந்த விளையாட்டு வீரர் | சின்னத்துரை ஜீவநாதன் (SC Tamil Blue Birds) |
| அதிகூடிய இலக்குகளை பெற்றவர் | சிவநாதன் நடராஜா (SC Blue Star Lausanne)
ஜெயராட் ஜெயசீலன் ஜாக்கோப் (SC Tamil Blue Birds) |
| இறுதியாட்டத்தின் சிறந்த வீரர் | சிவநாதன் நடராஜா (SC Blue Star Lausanne) |
Cricket
| முதலாம் இடம் | Eelam Fighters CC |
| இரண்டாம் இடம் | Goesgen CC |
| மூன்றாம் இடம் | Sky Warriors CC |
| சிறந்த துடுப்பாட்ட வீரர் / best betsman | புவனதாஸ் யோகசாந் (Eelam Fighters) |
| சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் / Best all rounder | பாலசுப்ரமணியம் ஜனார்த்தனன் (Eelam Fighters) |
| சிறந்த பந்துவீச்சாளர் – Best bowler | இந்திரபாலன் கலையரசன் (Sky Warriors) |
| சிறந்த ஆட்ட நாயகன் – Man of the match | யோகராசா சுதர்சன் (Eelam Fighters) |
| சிறந்த பந்து தடுப்பாளர் – Best fielder | அப்துல்லா (Goesgen CC) |
| Best Entertainer – Best fielder | சிறிகுமார் சிந்துஜன் (Jaguar CC) |
| தொடரின் ஆட்ட நாயகன் – Man of the series | ராசு கஜா (Jolly Star CC) |
| சிறந்த இளம் வீரர் | றொசான் கருணாமூர்த்தி (Goesgen CC) |
| சிறந்த பந்துக்காப்பாளர் | பாலசுப்ரமணியம் ஜனார்த்தனன் ( Eelam Fighters) |







