Advertisement

நினைவெழுச்சி நிகழ்வுகளின் ஒழுங்குமுறை

1. பொதுச்சுடர் ஏற்றல் (இதற்கு பெரியவிளக்கை பாவித்தல் வேண்டும்)
2. தேசியக்கொடியேற்றல்
3. சுடரேற்றல் (சிறியவிளக்கு அல்லது மெழுகுவர்த்தி)
4. மாலையிடுதல், மலர்வணக்கம்
5. அகவணக்கம்
6. நிகழ்வுகள்
7. ‘நம்புங்கள் தமிழீழம்’; பாடல்
8. கொடி இறக்கம்

நிகழ்வு நிறைவு
நன்றி.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

தமிழீழத்தில் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்படும்போது முதலில் தமிழீழ தேசியகொடியே ஏற்றப்படும்.

தமிழீழத் தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகளைப் பறக்கவிடும்போது ஒரே அளவான கொடிக்கம்பங்களில் கொடிகளை ஏற்றவேண்டும். தமிழீழத் தேசியக்கொடியின் இடப்புறமாக ஏனைய நாடுகளின் தேசியக்கொடிகளை அந்தந்த நாடுகளின் அகரவரிசைப்படி பறக்கவிடவேண்டும். எமது தேசியக்கொடியும் ஏனைய தேசியக் கொடிகளும் இடைஞ்சலின்றிப் பறக்கக்கூடியவகையிலும் (ஒன்றில் ஒன்று முட்டாமல்) சமனான இடைவெளியிலும் கொடிக்கம்பங்கள் நடப்படவேண்டும். எமது தேசியக்கொடியை ஏற்றியபின்பே ஏனையவற்றை ஏற்றவேண்டும். ஏனையவற்றை இறக்கியபின்பே எமது கொடியை இறக்கவேண்டும்.