தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்பட்ட ஓவியப்போட்டி 2017

ஆண்டுதோறும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்படும் ஓவியப்போட்டியானது நேற்றைய தினம் 28. 05. 2017 அன்று சுவிஸ் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது.
இம்முயற்சியானது அவர்களினது ஆர்வத்திற்கேற்ற வகையிலும், நுணுக்கம், பொறுமை, பொறுப்பு, கற்பனைத்திறன் போன்ற அவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.
இந்நுண்கலையில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளிமுதல்வர்கள் அனைவருக்கும் தமிழ் கல்விச்சேவை தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.