தமிழின அழிப்பு நாள் – சுவிஸ்

18.05.2017 வியாழக்கிழமை அன்று பேர்ண் பாராளுமன்றம் முன்றலில் நடைபெற்ற “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ” கவனயீர்ப்பு நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு…!
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத வலியாக மாறியதும், 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனப் பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில் இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான 8ம் ஆண்டு நினைவு கவனயீர்ப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள்வ கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.