செய்திகள்

சுவிசில் பிரமாண்டமாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா!

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர்  விளையாடு  விழா ஓகஸ்ட் மாதம் 11ம், 12ம் திகதிகளில் சூரிச் வின் ரத்தூர் நகரில் அமைந்துள்ள SportanlageDeuttweg மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. புலம் பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரிடம் தாயகம்  நோ கிய தேடலை ஏற்படுத்தும் நோக்ககில் தமிழர் இல்லம் இச்சுற்றுப் போட்டியினை நடாத்தி வருகின்றது. நடைபெற்று முடிந்த இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் , கனடா உள்ளிட்ட ஏனைய

[ Read More ]

சுவிஸில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் வணக்க நிகழ்வு!

தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக 14.08.2016 அன்று வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தின் மீது சிறிலங்கா வான்படை நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட செஞ்சோலை வளாகப் படுகொலையின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பேரன் மாநிலத்தில் உள்ள தமிழர் இல்லத்தில் நடைபெற்றது.

[ Read More ]

எழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு!

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 14.07.2018 சனிக்கிழமை பேர்ண் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம்

[ Read More ]

தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்பட்ட ஓவியப்போட்டி 2017

ஆண்டுதோறும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்படும் ஓவியப்போட்டியானது நேற்றைய தினம் 28. 05. 2017 அன்று சுவிஸ் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இம்முயற்சியானது அவர்களினது ஆர்வத்திற்கேற்ற வகையிலும், நுணுக்கம், பொறுமை, பொறுப்பு, கற்பனைத்திறன் போன்ற அவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது. இந்நுண்கலையில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளிமுதல்வர்கள் அனைவருக்கும் தமிழ் கல்விச்சேவை தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

[ Read More ]

தமிழின அழிப்பு நாள் – சுவிஸ்

18.05.2017 வியாழக்கிழமை அன்று பேர்ண் பாராளுமன்றம் முன்றலில் நடைபெற்ற “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ” கவனயீர்ப்பு நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு…! ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத வலியாக மாறியதும், 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனப் பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில் இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான 8ம் ஆண்டு நினைவு கவனயீர்ப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள்வ கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

[ Read More ]

‘Grand Prix Bern’ சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் தமிழின அழிப்பினை வெளிப்படுத்திய தமிழின உணர்வாளர்கள்!

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சர்வதேச ரீதியிலாக 13.05.2017 சனிக்கிழமை அன்று நடைபெற்ற ‘Grand Prix Bern 2017′ சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் தமிழின அழிப்பினை வெளிப்படுத்திய தமிழின உணர்வாளர்கள்!’ மரதன் ஓட்டப் போட்டியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடந்து பதக்கங்களைப் பெற்றுக் கொண்டதுடன் சிறிலங்காவில் சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பினையும் வெளிப்படுத்தினர். அகவணக்கத்துடன் மே18 – தமிழின அழிப்பு

[ Read More ]

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2017 !

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வின் செய்தியும், படங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி முக்கிய பகுதியில் செய்தியாக இணைப்பதோடு, முகப்புப் புத்தகங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். நன்றி சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை.

[ Read More ]

நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை 2017

தேசிய உணர்வோடு, அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கமும் இணைந்து முதற்தடவையாக நடாத்திய நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை நிகழ்வுகளுக்கான பரதநாட்டியப் போட்டிகளானது 15 மற்றும் 17ம் திகதிகளில் பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகளுடன் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடனும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.இரு தினங்களிலும் போட்டி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், ஈகைச்சுடரினைத் தொடர்ந்து நடராஜர் மற்றும் நிகழ்வுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், ஆசியுரைகளுடன் ஆரம்பமாகின.புலம்பெயர்ந்து வாழும் எமது இளையோர்களின் கலைத்திறமையை ஊக்குவித்து

[ Read More ]

மாமனிதர் எஸ்.ஜி. சாந்தன் வணக்க நிகழ்வு

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்படட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ்.ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – 28.02.2017! இவ்வெழுச்சி நிகழ்வில் அரங்கம் நிறைந்து நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் கனத்த இதயங்களுடன் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியதோடு; அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டமையானது சிறப்பாக அமைந்திருந்தது! இவ் வணக்கநிகழ்வின் காணொளி!

[ Read More ]